×

அமெரிக்க நாளிதழுக்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: அமெரிக்காவில் கடந்த ஆண்டு காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்ல முயற்சி நடந்தது. இதற்கான சதியில் இந்திய உளவுத்துறையான ரா பிரிவு அதிகாரி விக்ரம் யாதவ் ஈடுபட்டதாக அமெரிக்க நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘அமெரிக்க அரசு வழங்கிய தகவல்கள் அடிப்படையில், இந்திய உயர்மட்ட விசாரணை குழு வழக்கை விசாரித்து வருகிறது.

அதற்குள் சந்தேகத்திற்கு உட்பட்ட செய்தி, தீவிரமான விஷயத்தில் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி உள்ளது. இதுபோன்ற யூகத்தின் அடிப்படையிலான பொறுப்பற்ற கருத்துக்கள் எதற்கும் உதவாது’’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்க நாளிதழுக்கு இந்தியா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : India ,US ,New Delhi ,Gurpadwant Singh Bannu ,America ,Washington Post ,Vikram Yadav ,Indian intelligence ,RAW division ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி:...